Home One Line P2 ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தின் ‘கருப்பு பெட்டி’ கண்டுபிடிக்கப்பட்டது!

ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தின் ‘கருப்பு பெட்டி’ கண்டுபிடிக்கப்பட்டது!

677
0
SHARE
Ad

ஜகார்த்தா: ஜனவரி மாதம் ஜாவா கடலில் விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தில் இருந்து காணாமல் போன கருப்பு பெட்டியை இந்தோனிசிய தேடல் நடவடிக்கைக் குடு மீட்டுள்ளது. அவ்விபத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த குரல் பதிவை மீட்டெடுக்க ஒரு வாரம் வரை ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“கருப்பு பெட்டியிலிருந்து” தரவுகள் விபத்துக்கு சாத்தியமான காரணம் குறித்து முக்கிய தடயங்களை அளிக்க முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

#TamilSchoolmychoice

ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பிறகு, விமானத் தரவைச் சேமிக்கும் பதிவை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர், ஆனால் விமானம் ஏன் கடலுக்குள் விழுந்தது என்பதற்கான போதுமான தடயங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.