Home One Line P1 600,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் ஜூன் மாதத்தில் பெறப்படும்

600,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் ஜூன் மாதத்தில் பெறப்படும்

556
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முதல் 600,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை மலேசியா ஜூன் மாதத்தில் பெற உள்ளது.

“ஜூன் மாதத்தில் அஸ்ட்ராஜெனெகாவின் விநியோகம் தொடங்கும். அப்போது நாம் முதல் 600,000 தடுப்பூசிகளைப் பெறுவோம்,” என்று கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

“ஒவ்வொரு மாதமும் தடுப்பூசிகள் வரும்,” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

மார்ச் 2-ஆம் தேதி அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை நிபந்தனைக்குட்பட்டு பதிவு செய்ய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.