Home One Line P1 நம்பிக்கை கூட்டணி முன்னோக்கிச் செல்ல வேண்டும்!- அன்வார்

நம்பிக்கை கூட்டணி முன்னோக்கிச் செல்ல வேண்டும்!- அன்வார்

565
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நாட்டின் நிர்வாகத்தை கையகப்படுத்தும் திட்டங்கள் குறித்து அவர் இன்றைய நிகழ்ச்சியில் பேசவில்லை.

இன்று பிற்பகல் கோலாலம்பூரில் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்குடனான ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்த செய்தியை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். மக்களுக்கு நல்ல சிந்தனைகளை கொண்டு வர நம் இயந்திரங்களைத் தயார்படுத்த வேண்டும். இதைத்தான் நம்பிக்கை கூட்டணி கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“முன்னோக்கிப் பார்ப்பது நமக்கு நன்மை பயக்கும் என்று நான் கருதுகிறேன். மேலும் இந்த இலட்சியவாதத்தை, அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களிப்பின் வடிவத்தில் நான் காணலாம்,” என்று அன்வார் கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், பிகேஆர் தலைவர் மத்திய அரசை அமைப்பதற்கு போதுமான எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.