Home நாடு ஜோகூர் கொலை: பின்புலமாக செயல்பட்டதாக நம்பப்படும் தம்பதி கைது!

ஜோகூர் கொலை: பின்புலமாக செயல்பட்டதாக நம்பப்படும் தம்பதி கைது!

907
0
SHARE
Ad

JB murderகோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியிலுள்ள எண்ணெய் நிரப்பும் நிலையம் ஒன்றில், ஆடவர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பினாங்கைச் சேர்ந்த தம்பதியை காவல்துறை நேற்று புதன்கிழமை கைது செய்தது.

#TamilSchoolmychoice

இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஹாருன் வெளியிட்டிருக்கும் தகவலில், “ஜோகூர் கொலைக்கும், கைது செய்யப்பட்டிருக்கும் தம்பதிக்கும் வலுவான தொடர்பு இருப்பதாக நம்புகிறோம். கொலைக்கு மூளையாக அவர்கள் செயல்பட்டிருக்கலாம் என நம்புகிறோம். எனினும், விசாரணைக்குப் பின்னர் விரைவில் உறுதியாகத் தெரிவிப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட நபர் கடந்த 2004-ல் இருந்து 2016 வரை பல்வேறு போதைப் பொருள் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.