Home இந்தியா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

743
0
SHARE
Ad

rk-nagarசென்னை – ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது.

மொத்தம் 51 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் என மொத்தம் 59 பேர் போட்டியிடுகிறார்கள்.

#TamilSchoolmychoice

சுமார் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக உள்ளனர்.

இன்று நடைபெறும் தேர்தலின் முடிவுகள் வரும் டிசம்பர் 24-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.