Home உலகம் கோலாலம்பூர்-சிங்கப்பூரை இணைக்கும் அதிவேக இரயில் திட்டப் பணிகள் 2016-ல் தொடங்கும்!  

கோலாலம்பூர்-சிங்கப்பூரை இணைக்கும் அதிவேக இரயில் திட்டப் பணிகள் 2016-ல் தொடங்கும்!  

646
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 28 – கோலாலம்பூரையும், சிங்கப்பூரையும் இணைக்கும் அதிவேக இரயில் (HSR) சேவையின் கட்டமைப்பு பணிகள், 2016-ம் ஆண்டு முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்கத்தின் தரைவழி போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் டன்ஸ்ரீ சைட் ஹமிட் அல்பார் கூறுகையில், “கோலாலம்பூரிலிருந்து, சிங்கப்பூருக்கு 90 நிமிடங்களில் பயணம் மேற்கொள்ளும் வகையில் அதிவேக இரயில் சேவை உருவாக்கப்பட உள்ளது. இதற்காக தற்சமயம் ஏழு இரயில் நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.”

Prototype-bullet-train-537x284
அதிவேக இரயில் ஒன்றின் மாதிரி

“இரு நகரங்களுக்கு இடையே தற்போது இரயில் மூலம் பயணிக்க குறைந்தது 8 மணி நேரம் ஆகிறது. இதனை குறைக்கவே இந்த அதிவேக இரயில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், இந்த புதிய இரயில் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க சுமார் 38.4 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிவேக இரயில் உருவாக்கத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ள ஜப்பான், பல்வேறு நாடுகளுக்கு அதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவி செய்து வருகின்றது. அந்த வகையில் கிழக்கு ஜப்பானின் இரயில் நிறுவனம், இந்த புதிய புல்லட் இரயில் திட்டத்தினை மேம்படுத்துவதில் மலேசியாவிற்கு துணைபுரியத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜப்பான் நிறுவனம் கூறியதாவது:-

“புல்லட் இரயில் சேவையில் எங்களுக்கு 50 வருட அனுபவம் உள்ளது. எங்கள் நிறுவனம், ஜப்பானில் தொடர்ந்து பாதுகாப்பான, நம்பகத்தன்மை மிக்க இரயில் சேவையை வழங்கி வருகின்றது. அதனை மலேசியாவுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

மலேசியப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்த அதிவேக இரயில் திட்டம், 2020-ம் ஆண்டிற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.