Home Featured வணிகம் கேஎல்- சிங்கப்பூர் இரயில் ஒப்பந்தம்: டிசம்பர் 21-ல் கையெழுத்தாக வாய்ப்பு!

கேஎல்- சிங்கப்பூர் இரயில் ஒப்பந்தம்: டிசம்பர் 21-ல் கையெழுத்தாக வாய்ப்பு!

820
0
SHARE
Ad

singapore-malaysia-high-speed-rail-BIG-2-685x320புத்ராஜெயா – கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவேக இரயில் திட்டத்திற்கான இருதரப்பு ஒப்பந்தம் வரும் டிசம்பர் 21-ம் தேதி கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டாலான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நவம்பர் 29-ம் தேதி, சிங்கப்பூரின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஒருங்கிணைப்பு அமைச்சர் கா பூன் வானைச் சந்தித்தேன். இரு தரப்பிலும் இந்த ஒப்பந்தத்திற்கான சட்டப்பூர்வ விவகாரங்கள் தயாராகி வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இம்மாத இறுதிக்குள் சட்டப்பூர்வப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, வரும் டிசம்பர் 21-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும் அப்துல் ரஹ்மான் டாஹ்லான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice