Home நாடு “நஸ்ரியின் நிலைப்பாடு கூட்டணிக்கு ஏற்புடையதல்ல, நிறுத்திக் கொள்ள வேண்டும்!”- ரஹ்மான் டாலான்

“நஸ்ரியின் நிலைப்பாடு கூட்டணிக்கு ஏற்புடையதல்ல, நிறுத்திக் கொள்ள வேண்டும்!”- ரஹ்மான் டாலான்

850
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் நஸ்ரியின் நடவடிக்கை மற்றும் நிலைப்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான் சாடியுள்ளார். தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் விவகாரத்தில் விரோதத்தை ஏற்படுத்தும் அவரது நிலைப்பாடு, கூட்டணிக்கு ஏற்புடையதல்ல எனத் தெரிவித்தார்.

நஸ்ரியின் நிலைப்பாடு ஒட்டு மொத்த அம்னோவின் நிலைப்பாடாகக் கொள்ள முடியாது என தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணியின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில், மற்றவர்களை விட, நஸ்ரிதான் இராஜதந்திர ரீதியாக செயல்பட வேண்டும். இவ்வாறான சிக்கல்களைக் கையாளும் போது, அம்னோ தலைமைத்துவத்துடன் முதலில் சந்திப்பு நடத்தி, கருத்துக்களைக் கேட்க வேண்டும் என அவர் சாடினார். 

#TamilSchoolmychoice

தேமு செயலாளரான அவர் ஒரு சமாதான நடுவராக இருக்க வேண்டுமே தவிர, கோபத்தை ஏற்படுத்தக் கூடியவராகவோ அல்லது எதிராளியாகவோ செயல்படுவதற்கு அல்ல. பிரச்சனைகளை தீர்க்கும் இயந்திரமாக அவர் இயங்க வேண்டும், போர் மூட்டுபவராக அல்ல,” என்று ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.