Home உலகம் அமெரிக்கா: இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வர்த்தக சலுகைகள் இரத்து!

அமெரிக்கா: இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வர்த்தக சலுகைகள் இரத்து!

2134
0
SHARE
Ad

வாசிங்டன்: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறப் பொருட்களுக்கு இந்தியா மிக அதிக அளவிலான வரியை விதித்து வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகும், இந்திய சந்தைக்குள் அமெரிக்க நிறுவனங்கள் செயல்படுவதற்கான நியாயமான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு, இந்திய அரசு எவ்வித உறுதியும் அளிக்காத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

1970-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 5.6 பில்லியன்அமெரிக்கடாலர்கள்மதிப்பிலானஇறக்குமதிக்குசுங்கவரிவிதிப்பற்றசலுகையைஇந்தியாஅனுபவித்துவருவதாக டிரம்ப் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

“ஜெனரலைஸ்ட் சிஸ்டம் ஆப் பிரிபரன்சஸ்” (ஜிஎஸ்பி) எனப்படும் சலுகை பட்டியலிருந்து இந்தியாவை விலக்குவது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திலும், முறைபடி இந்தியாவிற்கும் தெரிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். ஜிஎஸ்பி மூலம் அதிகப் பயனை பெறும் நாடாக இந்தியா விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.