Home நாடு 250 ரிங்கிட் புத்தக பற்றுச்சீட்டு திட்டம் மீண்டும் அமலுக்கு வரும்!- மஸ்லீ

250 ரிங்கிட் புத்தக பற்றுச்சீட்டு திட்டம் மீண்டும் அமலுக்கு வரும்!- மஸ்லீ

787
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணி ஆட்சியின் போது 1 மலேசியா புத்தக பற்றுச்சீட்டு திட்டம் மாணவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியாக இருந்ததை யாரும் மறுக்க இயலாது.

ஆயினும், தற்போதைய அரசாங்கம், புதிய உயர்கல்வி மாணவர் உதவி (பிபிபிடி) திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 100 ரிங்கிட்டை மட்டுமே வழங்க இயலும் என அறிவித்திருந்தது. நடப்பு நிதிநிலைக் காரணமாக இந்தத் தொகை குறைக்கப்பட்டதாக மஸ்லீ குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்புக்கு பின்னர் சமூக ஊடகங்களில் நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு எதிராக, குறிப்பாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கிற்கு எதிரான கருத்துகள் பகிரப்பட்டன.

#TamilSchoolmychoice

நேற்று திங்கட்கிழமை, அடுத்த ஆண்டு தொடங்கி மீண்டும் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட அத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தார். மேலும், ஏழைகளுக்கு உதவி வழங்குவதையே அரசாஙகம் முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.