Home Featured இந்தியா சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே அதிவேக இரயில் சேவை – ஜெர்மன் குழு ஆய்வு!

சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே அதிவேக இரயில் சேவை – ஜெர்மன் குழு ஆய்வு!

901
0
SHARE
Ad

Bulletபுதுடெல்லி – ஜெர்மன் நாட்டு போக்குவரத்து அமைச்சர் மைக்கேல் ஒடன்வால்டு தலைமையில் அந்நாட்டு உயர்மட்ட பிரதிநிதிகள் குழு, டெல்லிக்கு வந்துள்ளது.

அக்குழுவினர், இரயில்வே வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல் மற்றும் இரயில்வே உயர் அதிகாரிகளை நேற்று சந்தித்து பேசினர். அப்போது, அதிவேக இரயில்களை இயக்குவது, தற்போது உள்ள பாதையில் இரயில்களின் வேகத்தை அதிகரிப்பது போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில், சென்னை-பெங்களூரு-மைசூரு இரயில்வே வழித்தடத்தில் அதிவேக இரயில்களை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஜெர்மன் குழு ஆய்வு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த ஆய்வுக்கான செலவுகளை ஜெர்மன் குழுவே ஏற்றுக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், தற்போதுள்ள இரயில் பாதைகளில் ஒன்றில், இரயில்களின் வேகத்தை மணிக்கு 200 கி.மீ.வரை அதிகரிப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.