Home Featured நாடு குடிநுழைவு இலாகாவில் நடந்த நாசவேலைகளுக்குப் பின்னணியில் ஒரு மலேசியர் – நூர் ரஷீத் தகவல்!

குடிநுழைவு இலாகாவில் நடந்த நாசவேலைகளுக்குப் பின்னணியில் ஒரு மலேசியர் – நூர் ரஷீத் தகவல்!

580
0
SHARE
Ad

Datuk Seri Noor Rashid Ibrahimகோலாலம்பூர் – மலேசியக் குடிநுழைவு இலாகாவின் கடப்பிதழ் சோதனை அமைப்பில் (myIMMs) நடந்த பல்வேறு முறைகேடுகளுக்குப் பின்னணியில் மலேசியர் ஒருவர் மூளையாகச் செயல்பட்டிருப்பதாக தேசிய காவல்படையின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ நூர் ரஷீத் இப்ராகிம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

அவரோடு, இதில் சம்பந்தப்பட்டுள்ள இன்னும் சிலரை அடையாளம் கண்டு விரைவில் கைது செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நாசவேலையை செய்தவர்கள் உள்ளூரைச் சேர்ந்த குழுவினர். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு குடிநுழைவு அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு செயல்பட்ட அவர்கள், பின்னர் அந்த எண்ணிக்கையை மெல்ல அதிகரித்துள்ளனர்” என்று இன்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, இக்குற்றங்களில் ஈடுபட்ட 15 குடிநுழைவு அதிகாரிகள் அதிரடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் 12 பேருக்கு இடைநீக்கமும், 8 பேருக்கு சம்பள உயர்வு நிறுத்தமும் செய்துள்ளது அரசாங்கம்.

மலேசிய விமான நிலையங்களில் உள்ள குடிநுழைவு இலாகாவின் கணினி அமைப்புகளில் தொடர்ச்சியாக நாளொன்றுக்குப் பலமுறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வந்ததையடுத்து, சந்தேகமடைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இக்குற்றங்கள் அம்பலமாகியுள்ளன.