Home உலகம் பாகிஸ்தானில் தண்டவாளத்தில் குண்டுவெடித்து பயணிகள் ரயில் தடம் புரண்டது 4 குழந்தைகள் உள்பட 8 பேர்...

பாகிஸ்தானில் தண்டவாளத்தில் குண்டுவெடித்து பயணிகள் ரயில் தடம் புரண்டது 4 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

576
0
SHARE
Ad

350x350_IMAGE27227523 கராச்சி,பிப்19-பாகிஸ்தானில் தண்டவாளத்தில் குண்டு வெடித்ததில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. இதில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாயினர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நேற்று, கராச்சியில் இருந்து பெஷாவர் நோக்கி குஷல்கான் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. உன்னர் வாகா ரயில் நிலையத்தை ரயில் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது தல் என்ற இடத்தில் தண்டவாளத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் தண்டவாளங்கள் சிதறியதால் வேகமாக வந்து கொண்டிருந்த குஷல்கான் எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

#TamilSchoolmychoice

தகவல் அறிந்த உன்னர் வாகா நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்த தாக்குதலில் காயமடைந்த 12க்கும் மேற்பட்டவர்களை மீட்டு ரகிம்யார்கான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தில் நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் குண்டுகளை வெடிக்க செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் கவாஜா சாத் ரபீக் உத்தரவிட்டுள்ளார். இதே பகுதியில் தபாஷி என்ற எக்ஸ்பிரஸ் ரயிலை குறி வைத்து சமீபத்தில் தாக்குதல் நடத்தியிருந்தனர். –