Home இந்தியா மோடியை ராவணனுடன் ஒப்பிட்டார் உ.பி. அமைச்சர் அம்பிகா சவுத்ரி!

மோடியை ராவணனுடன் ஒப்பிட்டார் உ.பி. அமைச்சர் அம்பிகா சவுத்ரி!

511
0
SHARE
Ad

20-modi-ambika-300-jpgலக்னோ, பிப் 20 -பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டுள்ளார் உத்தர பிரதேச மாநில அமைச்சர் அம்பிகா சவுத்ரி.

உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள பைரியா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அம்பிகா சவுத்ரி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இலங்கை மன்னன் ராவணன் எப்படி கர்வம் பிடித்தவரோ, அதே போன்று தான் மோடியும்.

#TamilSchoolmychoice

அவர் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுடன் போட்டி போட முடியாது என்றார். அம்பிகாவின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.