Home இந்தியா 7 பேரை விடுவிப்பது குறித்த தமிழக அரசின் கடிதத்தை ஆய்வு செய்த பிறகே முடிவு- ஷிண்டே

7 பேரை விடுவிப்பது குறித்த தமிழக அரசின் கடிதத்தை ஆய்வு செய்த பிறகே முடிவு- ஷிண்டே

489
0
SHARE
Ad

20-sushilkumar-shinde-1-600டெல்லி, பிப் 20 -ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசு கடிதம் அனுப்பிய பிறகு அதை ஆய்வு செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து 3 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறுகையில், அந்த 7 பேரை விடுதலை செய்வது குறித்த தமிழக அரசின் கடிதம் வந்ததா என்று நானும் காலையில் இருந்தே எனது அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

#TamilSchoolmychoice

ஆனால் இன்னும் கடிதம் வரவில்லை. கடிதம் வந்தபிறகு அதை ஆய்வு செய்து உரிய முடிவு எடுப்போம் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே .