Home கலை உலகம் உதயநிதிக்கு விஜய் தான் கதாநாயகன்

உதயநிதிக்கு விஜய் தான் கதாநாயகன்

526
0
SHARE
Ad

19-1392795999-udhayanidhi-stalin-11-2-600சென்னை, பிப் 20 – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய்யை வைத்து படம் பண்ணவே பிடிக்குமாம். தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் கதாநாயகன் ஆனார்.

இதையடுத்து அவர் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த இது கதிர்வேலன் காதல் படம் காதலர் தினத்தன்று திரையிடப்பட்டது. படத்தில் உதயநிதி நடிப்பு பாராட்டை பெற்றுள்ளது. படம் வெளிவருவதற்கு முன்பு இது கதிர்வேலன் காதல் படக்குழு பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்திற்கு விளம்பரம் தேடியது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதியிடம் நீங்கள் எந்தெந்த ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறீர்கள். உங்கள் விருப்பப்படி ஹீரோக்களை வரிசைப்படுத்தவும் என்று கேள்வி கேட்கப்பட்டது.

#TamilSchoolmychoice

விஜய், சூர்யா, அஜீத், தனுஷ் மற்றும் சிம்புவை வைத்து படம் தயாரிக்க விரும்புவதாக உதயநிதி தெரிவித்தார்.

உதயநிதி வரிசைப்படுத்திய நாயகர்களில் விஜய்க்கு தான் முதலிடம்.
தான் ஒரு விஜய் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் உதயநிதி தனக்கு பிடித்த  கதாநாயகன் விஜய்யை வைத்து குருவி படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடித்த ஏழாம் அறிவு, ஆதவன் ஆகிய படங்களை தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். அஜீத், தனுஷ், சிம்பு படங்களை அவர் இன்னும் தயாரிக்கவில்லை.

உதயநிதி சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை வினியோகம் மட்டும்  செய்திருக்கிறார்.