Home உலகம் அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கவே தாலிபான்கள் 23 வீரர்களை கொன்றுள்ளனர்: ஷரீப்

அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கவே தாலிபான்கள் 23 வீரர்களை கொன்றுள்ளனர்: ஷரீப்

448
0
SHARE
Ad

images (3) இஸ்லாமாபாத், பிப் 20 -அரசுக்கும், தாலிபான்களுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கவே 23 எல்லை பாதுகாப்பு வீரர்கள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பு கடந்த 2010ம் ஆண்டு தான் கடத்திச் சென்ற 23 எல்லை பாதுகாப்பு படை வீரர்களை தலையை துண்டித்து கொன்றுவிட்டதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் விரைவில் அந்த கொலைகளுக்கான ஆதாரங்கள் அடங்கிய வீடியோவையும் வெளியிடுவதாக அந்த அமைப்பின் பிரிவான முகமது ஏஜென்சி தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தாலிபான்கள் போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தாலிபான்களின் இந்த செயலை கண்டிக்கிறேன். இந்த சம்பவம் அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

இந்த ரத்தக்களறியை பாகிஸ்தான் ஏற்காது. அனைத்து கட்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி தான் தாலிபான்களுடன் நேர்மையாக பேச்சுவார்த்தை நடத்த அரசு சென்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.