Home வாழ் நலம் கணினியை அதிகம் பயன்படுத்துவோருக்கான சில எளிய கண் பராமரிப்பு வழிகள்

கணினியை அதிகம் பயன்படுத்துவோருக்கான சில எளிய கண் பராமரிப்பு வழிகள்

541
0
SHARE
Ad

18-1392697622-3-officeபிப் 20 -நமது ஆன்மாவின் கண்ணாடியாக செயல்படுவது கண்கள். அது வெளி உலகை காணும் ஜன்னலாக செயல்படுகிறது. கண்கள் உங்கள் அழகை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது.

நமது வாழ்க்கை முறையே, நமது கண்களின் ஆரோக்கியத்தை நிர்மாணிக்கும் விஷயம் ஆகும். நீண்ட நேரமாக கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் இதில் இருந்து தப்பிக்க முடியாது.

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, கண்களை பராமரிப்பது முக்கியமானதாகும். மேலும் நீண்ட நேரமாக கணினி முன் அமர்ந்து கொண்டு தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்கு இது மிகவும் அவசியமானதாகும்.

#TamilSchoolmychoice

கண்கள் எதுக்கு அடிக்கடி துடிக்குதுன்னு தெரியுமா? நீண்ட நேரமாக தொடர்ச்சியாக கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, அந்த முழு நேர பளு சுமையே கண்களை பாதிக்கும் முக்கிய காரணி. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

கணினி திரைக்கு மிக அருகில் உட்கார்ந்திருத்தல், ஜன்னலில் இருந்து திரையின் மீது படும் கண் கூசும் ஒளிவீச்சு, திரையின் மீதுள்ள தெளிவற்ற எழுத்துக்கள், திரையில் உள்ள வசதியற்ற பார்வைக் கோணம், திரையின் மீது நீடித்த மற்றும் மாறாத இமையாத பார்வை போன்றவை இதற்கு காரணமாகின்றன.

கண்களில் ஏற்படும் அரிப்புகளை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்!!! இதற்காக கணினி அருகில் அமர்ந்து, வேலை செய்வதை நிறுத்துவது உகந்தது அல்ல. எனவே அடுத்த தீர்வாக, கண்களை பராமரிப்பதே சிறந்த வழி.

இங்கு சில கண் பராமரிப்பு வழிகள்  கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முழு நேர தொடர்ச்சியான கணினி வேலையால்,கண்களில் பணிச்சுமை மற்றும் ஸ்ட்ரைன் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

இடைவேளைகளை எடுத்துக் கொள்ளுங்கள், நீண்ட நேரம் கண் இமைக்காமல், கணினி திரையை பார்த்துக் கொண்டு வேலை செய்வதால் கண்கள் உலர்ந்து விடும்.

கண்களில் பணிச்சுமையை மற்றும் ஸ்ட்ரைனை தவிர்ப்பதற்கு, சிறிய இடைவேளைகளை எடுத்து கொள்ள வேண்டும். இது கணினியில் வேலை செய்பவர்கள் கண்களை பாராமரிப்பதற்காக அறிவுறுத்தப்படும் வழிகளாகும்.