சிலாங்கூர், பிப் 20 – சிலாங்கூர் மந்திரி பெசாராக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பதவி ஏற்பதற்கு ஏதுவாக காஜாங் இடைத்தேர்தல் அமையும் என்பதற்கு அத்தொகுதியில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மலாயா பல்கலைக்கழகத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் மையம், இந்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.
அதன் படி, காஜாங் இடைத்தேர்தல் மூலமாக, அன்வார் மந்திரி பெசார் ஆவது ஏற்றுக்கொள்ளப்படுமா? என்ற கேள்விக்கு, சுமார் 576 பேர் (59 சதவிகிதம்) ‘ஆம்’ என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தேர்தல் காரணத்தோடு தான் உருவாக்கப்பட்டுள்ளது என 56 சதவிகித மக்களும், பொது நிதி இதனால் வீணாகாது என்று 53 சதவிகித மக்களும், இதனால் பிகேஆர் கட்சியில் உள்ள உள்கட்சிப் பூசல்கள் சரி செய்யப்படும் என்று 42 சதவிகித மக்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு அனைத்து இன மக்களிடமும் நடத்தப்பட்ட ஒன்றாகும்.