Home இந்தியா தீவிரமான முடிவுகளை எடுக்கும் திறன் நாடாளுமன்றத்துக்கு உள்ளது- மன்மோகன்சிங் நிறைவுரை

தீவிரமான முடிவுகளை எடுக்கும் திறன் நாடாளுமன்றத்துக்கு உள்ளது- மன்மோகன்சிங் நிறைவுரை

611
0
SHARE
Ad

22-manmohan-singh8-600டெல்லி, பிப் 22 – தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றியதன் மூலம், நம் நாட்டுக்கு தீவிரமான முடிவுகளை எடுக்கும் திறன் உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

15-வது மக்களவைக் கூட்டத் தொடர் கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் வழக்கமாக எழுப்பப்படும் கூச்சல்கள்,கோஷங்கள் முதலான எவ்வித இடையூறும் இல்லாமல் கடைசி நாளில் அமைதியும் ஒழுங்கும் நிலவியது.

மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சிங்கும் தனது கருத்துகளை முன்வைத்தார். மன்மோகன்சிங் தனது நிறைவுரையில் கூறியதாவது, தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்ட விதம், இந்தியாவின் முடிவெடுக்கும் திறனுக்கு மற்றொரு உதாரணம்.

#TamilSchoolmychoice

கடும் அமளியும் பதற்றமும் நிறைந்த நிலையில் இருந்து வெளியேறி, புதிய இணக்கமான சூழல் பிறக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளையும், நிறைகளையும், குறைகளையும் சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் எதிர்வரும் தேர்தல் மூலம் அரசை மதிப்பீடு செய்வார்கள் என  பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

அவை நடவடிக்கைகள் பாதிப்பதைத் தவிர்க்க சுஷில்குமார் ஷிண்டே மேற்கொண்ட முயற்சிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் ஒத்துழைப்புக்கும் மன்மோகன்சிங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மன்மோகன்சிங் மனைவி 15வது மக்களவையில் கடைசிநாள் அவை நடவடிக்கைகளை காண பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர் மக்களவைக்கு வந்தார். அவருடன் மேலும் சில பார்வையாளர்களும் வந்திருந்தனர்.

30 நிமிடங்கள் வரை பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து மக்களவை நடவடிக்கைகளை குர்சரண் கவுர் பார்வையிட்டார். ஆனால் அப்போது பிரதமர் அவையில் இல்லை. ஊழலுக்கு எதிரான மசோதாக்கள் கடைசி கூட்டத்தொடரில் அமளிக்கு மத்தியில் இடைக்கால ரயில்வே பட்ஜெட், மத்திய பட்ஜெட், தெலுங்கானா மசோதா நிறைவேறியுள்ளன.

ஆனால் ராகுல் காந்தி பரிந்துரைத்து வந்த ஊழலுக்கு எதிரான 6 மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை. அதேவேளையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சர்ச்சைக்குரிய தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.