இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்துவிட்டது.
இந்தநிலையில், இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜீராவ் ஸ்டுடியோவில் தொடங்க உள்ளது. இதற்காக விஜய், முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் ஆந்திராவுக்கு சென்றுள்ளார்கள்.
விஜய் தரப்பிலும் இந்தப் படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். தலைவா படம் தோல்வியடைந்த நிலையில், அவர் நடித்து கடைசியாக வெளிவந்த ஜில்லா படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் முருகதாஸ் படத்தின் மூலம் தனது வணிகச் சந்தையை நிலைநிறுத்திக் கொள்ளும் எண்ணத்தில் விஜய்யும் இந்தப் படத்தில் முழுமூச்சுடன் கவனம் செலுத்தி ஈடுபாட்டோடு நடித்து வருகின்றார்.