Home உலகம் திபெத் தலைவர் தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தார்!

திபெத் தலைவர் தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தார்!

494
0
SHARE
Ad

NEWS-US-USA-HEALTHCARE-OBAMA-PLANவாஷிங்டன், பிப்.22 – சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, திபெத்திய ஆன்மீகத் தலைவர்தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று சந்தித்தார்.

#TamilSchoolmychoice

வெள்ளைமாளிகையில் அரசியல் விருந்தினர்களை வழக்கமாக சந்திக்கும் ஓவல் மாளிகைக்குபதிலாக, தனது இல்லத்தில் அவர் தலாய் லாமாவை சந்தித்தார். மேலும் அவர்களதுசந்திப்பின்போது பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதற்குமுன்னர் ஒபாமாவுக்கும், தலாய் லாமாவுக்கும் நிகழ்ந்த சந்திப்புகளைப் போலவே, ஒரு சர்வதேச மத மற்றும் கலாசாரத் தலைவர் என்ற முறையிலேயே தலாய்லாமாவை ஒபாமா சந்தித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஹைடன் கூறுகையில், “சீனாவுடன் திபெத் ஒன்றிணைவதையோ, அல்லது விடுதலை பெறுவதையோ வலியுறுத்தாத தலாய்லாமாவின் நடுநிலைத் தன்மையை அமெரிக்கா ஆதரிக்கிறது.” என்று தெரிவித்தார்.