Home இந்தியா ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம்-மத்திய அமைச்சர் நாராயணசாமி கண்டனம்!

ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம்-மத்திய அமைச்சர் நாராயணசாமி கண்டனம்!

556
0
SHARE
Ad

23-narayana-swamy-3003புதுச்சேரி, பிப் 24 – ராஜிவ் கொலை கைதிகளை விடுவிக்க முயன்ற விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அதிகார தோரணையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தன்னிச்சையாக செயல்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகளை தடை செய்ததை ஆதரித்ததும், நளினிக்கு பரோல் வழங்க மறுத்தும் அரசியல் செய்த ஜெயலலிதா இப்போது இரட்டை வேடம் போடுகிறார் என்றார் அவர்.

#TamilSchoolmychoice

ராஜிவ் கொலைக் கைதிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயூள் தண்டணையாக குறைத்து உத்தரவிட்டதை நாராயணசாமி கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தண்டனை குறைப்பை ஒரு போதும் ஏற்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.