Home இந்தியா அத்தனை பேரும் கண்ணீரால் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்வோம்- பாரதிராஜா!

அத்தனை பேரும் கண்ணீரால் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்வோம்- பாரதிராஜா!

633
0
SHARE
Ad

23-1393136711-bharathiraja1-600சென்னை, பிப் 24 – முதல்வர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இதற்காக உலக தமிழர்கள் அனைவரும், கண்ணீரால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மறப்பதும், மன்னிப்பதும் மனித மாண்பு.

முதல் முறையாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார். இதற்காக ஒட்டு மொத்த தமிழர்களும் அவருக்கு உறுதுணையாக நிற்பார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜெயலலிதாவின் விடுதலை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் பாரதிராஜா தலைமையில் கூட்டம் நடந்தது.

அக்கட்டத்தில் பாரதிராஜா கூரியது உலக நாடுகள் அனைத்தும் தூக்குத்தண்டனையை எதிர்க்கும் சூழ்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் மிக சரியான தீர்ப்பை சொல்லி இருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் முடிவு என்று அவர் தீர்ப்பு கூறியதும் முதல்வர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இதில் அரசியல் கிடையாது. எனவே தமிழ் திரையுலகை சார்ந்த நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து  கண்ணீரால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.