Home வாழ் நலம் புகையிலை விற்பனையை முற்றிலும் நிறுத்தினால் 40 சதவீதம் புற்றுநோயை கட்டுப்படுத்தலாம்!

புகையிலை விற்பனையை முற்றிலும் நிறுத்தினால் 40 சதவீதம் புற்றுநோயை கட்டுப்படுத்தலாம்!

915
0
SHARE
Ad

ht2407 (1)சென்னை, பிப் 24 – புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் நிறுத்தி விட்டால் 40 சதவீதம் புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என்று டாக்டர் வி.சாந்தா கூறினார். இந்திய பல்மருத்துவ சங்கம்(சென்னை கிளை) மற்றும் புற்றுநோய் மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அரங்கத்தில்  வாய் புற்றுநோய் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா தலைமை வகித்தார்.

மருத்துவமனை பேராசிரியர் கணேசன், இந்திய பல் மருத்துவ சங்க சென்னை கிளை செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விதுபாலா உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய பல் மருத்துவ சங்க தலைவர் ரங்கராஜன் பங்கேற்றார்.

#TamilSchoolmychoice

கருத்தரங்கில் டாக்டர் வி.சாந்தா பேசியதாவது புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். புற்றுநோய் என்றாலே வலி, சாவு, அதை குணப்படுத்தவே முடியாது என்று நினைப்பதெல்லாம் தவறு. புற்றுநோயை குணப்படுத்த முடியும்.

ஆரம்பத்திலே கண்டறிந்தால் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். புற்றுநோய் எதற்காக வருகிறது என ஆராய்ந்து பார்த்தால், நமது வாழ்க்கை முறை, என்ன மாதிரியான உணவு வகைகளை சாப்பிடுவது, நமது பழக்க வழக்கம் தான் காரணமாக இருக்கிறது.

முக்கியமாக புகை பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் வருகிறது. பான் மசாலா, குட்கா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலை தான் வாய் புற்றுநோயை உருவாக்குகிறது.

இதை தடுக்க வேண்டும் என்றால் சிறு வயதிலே தங்கள் பிள்ளைகளை பெற்றோர் கண்காணித்து கண்டிக்க வேண்டும். அடுத்த தாக பள்ளி ஆசிரியர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஊடகங்களுக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை புகை பிடிப்பதால் வரக்கூடிய நுரை யீரல் புற்றுநோய் என்பது 4வது இடத்தில் இருந்தது.

இப்போது இந்த வகை புற்றுநோய் முதல் இடத்தை பிடித்துள்ளது. புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் நிறுத்தி விட்டால் நாட்டில் 40 சதவீதம் புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு வி.சாந்தா பேசினார்.

இந்திய பல் மருத்துவ சங்க தலைவர் ரங்கராஜன் பேசுகையில்,”வாய், தொண்டை, கழுத்து புற்றுநோய் தாக்குவதற்கு பான்மசாலா, குட்கா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலை தான் 90 சதவீதம் காரணம். இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வெளிநாடுகளில் மிக குறைவு.

ஏனென்றால் அங்கு புகைப்பிடிப்பவர்கள் தான் அதிகம். மெல்லும் வகை புகையிலை வெளிநாடுகளில் விற்பதில்லை. இதனால் அந்நாட்டு மக்கள் புகையிலைகளை பயன்படுத்துவதில்லை.

நம் நாட்டில் புகையிலை பொருட்களுக்கு தடை செய்தாலும், முற்றிலும் அமல்படுத்தப்படவில்லை. புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடை செய்தால் வாய் புற்றுநோயை கட்டுப்படுத்தலாம். ஆண்டுக்கு ஒரு முறை வாய் பரிசோதனை செய்ய வேண்டும். வாய் புற்றுநோயை கண்டறிவது குறித்து பல் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.