Home இந்தியா நாடாளுமன்ற தேர்தல்- பாஜக கூட்டணியில் இணைந்தார் பாஸ்வான்!

நாடாளுமன்ற தேர்தல்- பாஜக கூட்டணியில் இணைந்தார் பாஸ்வான்!

386
0
SHARE
Ad

24-ram-vilas-paswan-600டெல்லி, பிப் 24 – பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி இணைந்துள்ளது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதை அடுத்து நாடா தேர்தல் நடத்துவது குறித்த ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இதனையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் தேர்தல் கூட்டணி வியூகம் அமைப்பது குறித்து பிற அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தேசிய அரசியலில் திடீர் திருப்பமாக நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிகள் இடையே                                                                                                 கூட்டணி உறுதியாகியுள்ளது.

இத்தகவலை லோக் ஜன சக்தி கட்சியின் மூத்த தலைவர் சூரஜ்பான், பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எனினும் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய ராம்விலாஸ் பாஸ்வான், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பிகாரில் மக்களவைத் தேர்தலில் லோக் ஜன சக்தி கட்சி போட்டியிடும் என்று அறிவித்திருந்தார். ஆனால் திடீரென பாஜகவுடன் லோக்ஜன சக்தி கூட்டணி அமைக்க முடிவு செய்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் 40 தொகுதிகளில் 10 தொகுதிகளை லோக் ஜன சக்தி கேட்டிருக்கிறது. ஆனால் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 5 தொகுதிக்கு மேல் ஒரு தொகுதியைக் கூட தர முடியாது என ராம்விலாஸ் பாஸ்வானிடம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாம். இதனாலேயே பாஜக அணிக்கு சென்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.