Home இந்தியா பீகாரில் 17 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக போட்டி

பீகாரில் 17 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக போட்டி

1156
0
SHARE
Ad

புதுடில்லி – அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலுக்கான ஆர்வமும், பரபரப்பும் அதிகரித்து வரும் நிலையில், ஆளும் பாஜக மாநிலம் வாரியாக கூட்டணி அமைப்பதிலும், தொகுதிப் பங்கீடுகளுக்கு இறுதி வடிவம் தருவதற்கும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இன்று புதுடில்லியில் பாஜக தலைவர் அமிட் ஷா, பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பீகாரில் கூட்டணி முடிவாகிவிட்டது.

அதன்படி பாஜக 17 இடங்களிலும், நிதிஷ் குமாரின் கட்சி 17 இடங்களிலும் ராம்விலாஸ் பஸ்வானின் கட்சி 6 இடங்களிலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்.