Home இந்தியா போலியோவை ஒழித்தது போல் காசநோயையும் ஒழிக்க வேண்டும்-பிரணாப் முகர்ஜி

போலியோவை ஒழித்தது போல் காசநோயையும் ஒழிக்க வேண்டும்-பிரணாப் முகர்ஜி

491
0
SHARE
Ad

pranabபுதுடெல்லி, பிப் 24 – போலியோவை ஒழித்தது போல், இரண்டு நிமிடங்களுக்கு ஒருவரின் உயிரை பறிக்கும் ஆட்கொல்லி நோயான காசநோயை நாட்டில் இருந்து முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அதிபர் பிரணாப் முகர்ஜி நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற 68வது தேசிய காசநோய் மற்றும் இதய நோய்கள் மாநாட்டின் துவக்கம் மற்றும் தேசிய காசநோய் தடுப்பு இயக்கத்தின் 70வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அதிபர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

அவரது உரையில்  உலகம் முழுவதும் காசநோயை கட்டுப்படுத்த வேண்டுமானால் முதலில் இந்தியாவில் அந்நோயை கட்டுப்படுத்த வேண்டும். நாம் அனைவரும் முழுமனதோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் காசநோய் மற்றும் பிற தடுக்கக்கூடிய நோய்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்.

#TamilSchoolmychoice

கடந்த 2005ம் ஆண்டு 1 லட்சம் பேருக்கு 209 பேரும், 2012ல் லட்சம் பேருக்கு 176 பேரும் காசநோய்க்கு பலியாகி உள்ளனர். வருடந்தோறும் காசநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

போலியோவை முற்றிலும் ஒழித்ததுபோல நமது நாட்டிலிருந்து காசநோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரு நாளில் 750 பேர் இந்நோய்க்கு பலியாகின்றனர்.

ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒருவர் காசநோயால் உயிரிழக்கிறார் என்பதால் இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு மிகப் பெரிய பொறுப்புள்ளது. எனவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய தேவையான திட்டங்கள், அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைகள் ஆகியவை அரசு மற்றும் தனியார்  மருத்துவமனைகளில் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

இந்த கொடிய நோயின் தண்டனையில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை காக்க மருத்துவத் துறையினர் காசநோய் ஒழிப்பில் தீவிரமாக ஈடுபடவேண்டும், அப்போதுதான் ஒவ்வொருவரும் நலமுடன் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பாடுபட முடியும் என அதிபர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.