Home இந்தியா இன்று மகா சிவராத்திரி – திருவண்ணாமலை, ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்தனர்

இன்று மகா சிவராத்திரி – திருவண்ணாமலை, ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்தனர்

673
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_30345880986திருவண்ணாமலை, பிப் 27 –  இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோயில்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் எனும் அகந்தை உருவானபோது, அடிமுடி காணாத லிங்கோத்பவராக சிவபெருமான் காட்சி அளித்த நாள் மகா சிவராத்திரி.

நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மகா சிவாராத்திரி நாள் உருவான திருவண்ணாமலை கோயிலில் சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. மேலும் கோயில் வளாகத்தில் மலர்கள், உப்பு, வண்ணங்களால் இறைவனின் உருவங்கள் வரையப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணியளவில், கோயிலில் லட்சகணக்கான தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபடுவார்கள். இரவு 8.30 மணிக்கு முதல்கால பூஜையும், இரவு 11 மணிக்கு 2-ஆம் கால பூஜையும், அதிகாலை 2 மணிக்கு 3-ஆம் கால பூஜையும், அதிகாலை 4 மணிக்கு 4-ஆம் கால Tamil-Daily-News-Paper_9992182255பூஜையும் நடைபெறும்.

#TamilSchoolmychoice

நள்ளிரவு 12 மணிக்கு, கருவறையின் மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இதேபோல, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது.

அதிகாலையில் அக்னி தீர்த்த கடலில் நீராடி ஏராளமான பக்தர்கள் விரதத்தைத் தொடங்கினர். இன்று அதிகாலை கால பூஜையை தொடர்ந்து ராமநாதசுவாமிக்கு தொடர்ந்து பகல் முழுவதும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்ட கோயில் நடை பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும்.