Home இந்தியா வெண்ணிற ஆடை நிர்மலா அதிமுகவில் இணைந்தார்

வெண்ணிற ஆடை நிர்மலா அதிமுகவில் இணைந்தார்

746
0
SHARE
Ad

Nirmala Vennira Aadai 300 x 200சென்னை, பிப் 27 – அந்த நாளைய அழகு நடிகைகளில் ஒருவரான வெண்ணிற ஆடை நிர்மலா இன்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார் என அந்தக் கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களின் பலத்தைக் காட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்திற்கு ஏதுவாக மக்களிடையே பிரபலமான நடிக, நடிகையரையும் பிரபலங்களையும் இணைத்துக் கொள்ள ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று முதல் அதிமுகவில் இணையும் வெண்ணிற ஆடை நிர்மலா, ஏற்கனவே அதிமுகவில் இருந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் காலத்தில் அப்போது சட்டமன்ற மேலவை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட பரிந்துரை செய்யப்பட அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளையும் பலர் மறந்திருக்கமாட்டார்கள்.

ஜெயலலிதா முதன் முதலாக தமிழில் அறிமுகமான அதே வெண்ணிற ஆடை படத்தில்தான் நிர்மலாவும் இயக்குநர் ஸ்ரீதரால்  முதன் முதலாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் எம்.ஜி.ஆருடன் இணைந்து ரகசியப் போலீஸ் 115, இதயக்கனி போன்ற படங்களில் நடித்தார்.

அண்மையக காலமாக தமிழ் நாட்டுத் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வருகின்றார்.

மேலும் பலர் அதிமுகவில் இணைந்தனர்

வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் சேர்ந்து, இன்று முதல்வரைச் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டோரின் பட்டியலை அதிமுக வெளியிட்டது.

அந்த அறிவிப்பின்படி,கலைமாமணி நடிகர், பாடகர் டி.ஆர். மகாலிங்கத்தின்பேரன் ராஜேஷ் மகாலிங்கம், எம்.ஜி.ஆர். கழக தலைமை நிலையச் செயலாளர் வி.ராஜ்குமார், தேனி மாவட்டம், கம்பம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கோபாலன், ஈரோடு புறநகர் மாவட்டம், பவானிசாகர் தொகுதி முன்னாள் சட்டமன்றஉறுப்பினர் வி.கே. சின்னசாமி, பெருந்துறை தொகுதி முன்னாள் சட்டமன்றஉறுப்பினர் கே.எஸ். பழனிச்சாமி, காங்கயம் தொகுதி முன்னாள் சட்டமன்றஉறுப்பினர் பி. மாரப்பன், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.ஜெயபால் ஆகியோர் தனித் தனியே முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படைஉறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.