Home கலை உலகம் விஜய்யுடன் ஜோடி சேர முன்னணி கதாநாயகிகள் போட்டி!

விஜய்யுடன் ஜோடி சேர முன்னணி கதாநாயகிகள் போட்டி!

519
0
SHARE
Ad

1சென்னை, மார் 5 – விஜய்யை வைத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க கோலிவுட்டின் முன்னணி நாயகிகள் போட்டா போட்டி போடுகிறார்கள். ஜில்லா படத்தை அடுத்து விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். கொல்கத்தாவில் பூஜை போட்டு படத்தை துவங்கினார்கள். இதையடுத்து சென்னையில் ஒரு பாடலை படமாக்கிவிட்டு படக்குழு ஆந்திராவுக்கு சென்றுவிட்டனர்.

முருகதாஸ் படத்தை அடுத்து விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார். சிம்புதேவன் deepika_padukone_01கூறிய கதை விஜய்க்கு பிடித்துவிட்டது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனேவை கதாநாயகியாக்க நினைத்தார்கள். ஆனால் அவரோ கதையைக் கேட்காமல் ஒரு நாளைக்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

இதையடுத்து வேறு நாயகியை தேடினார்கள். உலக அழகி பட்டம் வென்று விஜய்யின் தமிழன் படம் மூலம் கதாநாயகியான பிரியங்கா சோப்ராவை அணுகினார்கள். அவரும் தனது விஜய்யுடன் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். சிம்புதேவன் படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். அதில் ஒருவர் தான் பிரியங்கா சோப்ரா.

#TamilSchoolmychoice

மற்றொரு நாயகி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. விஜய் படத்தில் நடிக்க கோலிவுட்டின் முன்னணி நாயகிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற ஹன்சிகா, காஜல் அகர்வால், அமலா பாலும் முயற்சி செய்கிறார்கள்.