Home இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களை மதிக்காதவர் ஜெயலலிதா-மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டு!

கூட்டணி கட்சித் தலைவர்களை மதிக்காதவர் ஜெயலலிதா-மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டு!

698
0
SHARE
Ad

Mkspictureசென்னை, மார்ச் 10 – கூட்டணி கட்சித் தலைவர்களை மதிக்காதவர் ஜெயலலிதா என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரது பேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில், அண்ணா பெயரை வைத்து கொண்டு கட்சி நடத்தும் ஜெயலலிதா மாற்றுக் கட்சி தலைவர்களை மட்டுமின்றி தன்னோடு கூட்டணியில் இருக்கும் கட்சி தலைவர்களைக்கூட மதிப்பதில்லை.

ஜெயலலிதா 1991-96ல் பிரதமராக இருந்த நரசிம்மராவிற்கும் தனக்கும் “தலைமுறை இடைவெளி இருக்கிறது“ என்று குற்றம் சாட்டினார். அப்போது காங்கிரஸ் கூட்டணியில் தான் ஜெயலலிதா இருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றால், தன் மீதுள்ள வழக்குகளில் இருந்து தப்பி விடலாம் என்று கருதி 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாமக, மதிமுக போன்ற கட்சிகளின் அலுவலகங்களுக்கே போனவர் ஜெயலலிதா.

பிறகு டாக்டர் ராமதாஸை கைது செய்தவர். வைகோவை பொடா சட்டத்தில் சிறையிலடைத்தவர். 1998-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். திமுக ஆட்சியைக் கலைக்கிறேன் என்று உத்தரவாதம் தாருங்கள், அப்போது தான் நான் ஆதரவுக் கடிதம் தருவேன்“ என்று கூறினார். வாஜ்பாய் பிரதமராக விடாமல் இழுத்தடித்து ஆதரவுக் கடிதம் கொடுத்து எதிர்ப்புத் தெரிவித்தர்.

#TamilSchoolmychoice

பாஜக கட்சியின் இன்னொரு மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி செலக்டீவ் அம்னீஷியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது’’ என்றார். அதன் பிறகு 1999-ல் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தார். விழுப்புரம் கூட்டத்தில் சோனியாவை 40 நிமிடம் வரை காத்திருக்க வைத்து  அவமானப்படுத்தினார்.

2001-ல் ஆட்சியிலிருந்த போதே “தகரம் கண்டுபிடிக்கும் முன்பே கம்யூனிஸ்டுகள் உண்டியலை கண்டிப்பிடித்தவர்கள்“என்று கம்யூனிஸ்ட் கட்சியினரை ஏளனம் செய்து அருவருக்கத்தக்க வகையில் பேசி, சட்டமன்றத்திலும் அதனை பதிவு செய்தவர் ஜெயலலிதா.

இப்போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் கூட்டணி என்று அறிவித்துவிட்டு அவர்களை நடத்திய விதம் தெரிந்த விஷயம் தான். மாற்றுக் கட்சி தலைவர்களையும், கூட்டணி கட்சி தலைவர்களையும் துச்சமென மதித்து ஆணவப் போக்குடன் நடந்து கொள்ளும் ஜெயலலிதா கையிலா மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்ற அதிகாரத்தை வாக்காளர்கள் கொடுக்கப் போகிறார்கள்? நிச்சயம் மாட்டார்கள். அவர் கையில் கொடுத்தால் அது ’மதம் பிடித்த யானையிடம் சிக்கிய பச்சைக் குழந்தை போல் பரிதவிக்கும்“ என்பது தமிழக வாக்காளர்களுக்கு நன்றாகவே தெரியும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.