என்ன ஒரு இரவு, விஜய் அண்ணா மற்றும் தனுஷுக்கு நன்றி என்று ட்விட்டரில் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பரம எதிரிகள் நெருங்கிய நண்பர்களாக முடியும் என்றால் அது நானும், தனுஷும் தான் என்று தெரிவித்து சிம்பு ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
தனுஷ் இளையதளபதி விஜய்யை சந்தித்து அவருடன் ஆடிப் பாடி மகிழ்ந்ததுடன் கிசுகிசுக்கள் பற்றி பேசியதாகவும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். உக்ரம் என்ற கன்னட படத்தை தமிழில் படமாக்க தனுஷும், விஜய்யும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.