நியூயார்க், மார்ச் 11 – கலிபோர்னியாவில் 6.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோரப் பகுதிகளில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. வடக்கு கலிபோர்னியா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயிர் பயத்தில் வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் இருந்து வெளியேறிய அவர்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் யுரேக்கா கடலோரப் பகுதிகளும் நடுங்கியதாக புவியியல் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.