Home இந்தியா விதிமுறைகளை மீறியதாக இதுவரை 12,967 வழக்குகள் – தேர்தல் அதிகாரி பிரவீண் குமார்!

விதிமுறைகளை மீறியதாக இதுவரை 12,967 வழக்குகள் – தேர்தல் அதிகாரி பிரவீண் குமார்!

571
0
SHARE
Ad

Tamil_Daily_News_98831903935சென்னை, மார்ச் 12 –  தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை 12,967 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார். சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் குறித்து அதிமுக-விடம்  விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியதாகவும் அதிமுக தரப்பில் இருந்து விளக்கம் தரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாகனச் சோதனையில் இதுவரை ரூ. 2.16 கோடி பணம் மற்றும் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார். அரசியல் கட்சியினர் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதி என்றும் பிரவீண்குமார் தெரிவித்தார்.