Home இந்தியா பாஜக-வின் நமோ டீக்கு தடை – தேர்தல் ஆணையம் அதிரடி!

பாஜக-வின் நமோ டீக்கு தடை – தேர்தல் ஆணையம் அதிரடி!

423
0
SHARE
Ad

e8668cd8-6956-45a4-a384-eddffc6a60a3wallpaper1டெல்லி, மார்ச் 12 – பாஜகவினரின் நமோ டீ விற்பனைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இலவசமாக எதையும் வாக்காளர்களுக்கு தரக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். டீ விற்றவர் மோடி என்று காங்கிரஸார் பிரசாரம் செய்யப்போக அதையே தனக்கு சாதகமாக்கி நமோ டீ ஸ்டால் என்ற பெயரில் நாடு முழுவதும் டீக்கடைகளை நிறுவி இலவசமாக டீ விநியோகித்து வருகிறார்கள் பாஜகவினர்.

மோடி கூட்டம் நடக்கும் இடங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்த நமோ டீ ஸ்டால்களைத் திறந்து இலவசமாக டீ விநியோகித்து வருகின்றனர். மேலும் டீக்கடை போக பல்வேறு வகையான கடைகளையும் அவர்கள் திறந்து வருகின்றனர். மேலும் மோடியே டீக்கடைகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசவும் ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் நமோ டீஸ்டால்களுக்கு தேர்தல் ஆணையம் திடீரென தடை விதித்து விட்டது. இலவசமாக டீ விநியோகம் செய்வது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்குச் சமம். இலவசமாக வாக்காளர்களுக்கு எதையும் தரக்கூடாது என்றும் கூறியுள்ளது. மேலும் இலவசமாக டீ விநியோகிக்கும் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.