Home கலை உலகம் இளையராஜாவுடன் மனஸ்தாபமா? யுவன் சங்கர் ராஜா பதற்றம் !

இளையராஜாவுடன் மனஸ்தாபமா? யுவன் சங்கர் ராஜா பதற்றம் !

485
0
SHARE
Ad

Kollywood-news-8637சென்னை, மார்ச் 12 – தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபம் என்ற தகவலால் பதற்றமடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா. இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதனால் இளையராஜாவுக்கும், அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இதையறிந்து பதற்றமடைந்த யுவன் தனது இணைய பக்கத்தில் கூறுகையில், நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன். இந்த முடிவுக்கு என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாகவுள்ளனர். எனக்கும் என் அப்பா இளையராஜாவுக்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை என்றார்.

ஆனால் யுவன் இஸ்லாம் மதத்துக்கு மாறியதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இந்த விஷயத்தில் நான் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்வும், கடந்த ஒரு வருடமாக நான் இஸ்லாத்தை பின்பற்றி வருகிறேன். ஒவ்வொரு நாளும் 5 வேளை தொழுகை செய்கிறேன்.

#TamilSchoolmychoice

ஸ்டுடியோவில் இருக்கும்போதும் இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி பிரார்த்தனை செய்கிறேன். விரைவில் எனது பெயரையும் மாற்றிக்கொள்ள உள்ளேன்.  இது என்னுடைய சொந்த விருப்பம் என கூற்னார் யுவன் ஷங்கர் ராஜா.