Home கலை உலகம் துபாயில் யுவன் சங்கருக்கு மூன்றாவது திருமணமா?

துபாயில் யுவன் சங்கருக்கு மூன்றாவது திருமணமா?

680
0
SHARE
Ad

Yuvan Shankar Rajaசென்னை, நவம்பர் 7 – பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு விரைவில் மூன்றாவது திருமணம் துபாயில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இம்முறை யுவன் காதல் வலையில் சிக்கவில்லை. இது முறைப்படி பேசி முடிக்கப்பட்ட திருமணமாக நடைபெற உள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

மணமகள் துபாயில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளாராம். அவரது குடும்பத்தார் தமிழகத்தின் கீழக்கரை பகுதியில் வசித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

மலேசியத் தோழி ஒருவர் மூலம் மணமகளின் குடும்பம் குறித்து யுவனுக்கு தெரிய வந்துள்ளது. அதே தோழி யுவனைப் பற்றி மணமகளின் குடும்பத்தாருக்கு தெரிவிக்க, ஒரு நல்ல நாளில் இரு தரப்பினரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இரு தரப்புக்கும் திருப்தி ஏற்பட, இதன் பின்னர் யுவனும் மணமகளும் சந்தித்துப் பேசினராம். இதையடுத்து திருமண தேதி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

மணமகள் பெயர் ஜஃப்ரோன்னிசா என்றும் தகவல் வெளியாகி உள்ளது.