Home தொழில் நுட்பம் கண்ணாடிகள் இல்லாத முப்பரிமாணத் திரை கொண்ட ஐபோன்கள்  – ஆப்பிள் புதிய திட்டம்!

கண்ணாடிகள் இல்லாத முப்பரிமாணத் திரை கொண்ட ஐபோன்கள்  – ஆப்பிள் புதிய திட்டம்!

719
0
SHARE
Ad

Apple Logoநியூயார்க், நவம்பர் 7 – கண்ணாடிகள் இல்லாத முப்பரிமாணத் திரை கொண்ட (3D) ஐபோன்களை உருவாக்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் முப்பரிமாணக் கருவிகளை உருவாக்குவதில் எப்பொழுதும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. எனினும் இந்த முயற்சியில் பெரும்பாலான நிறுவனங்கள் தோல்வியையே சந்திக்கின்றன.

இந்த வருடத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான அமேசானின் முப்பரிமாண செல்பேசியான ‘பயர்போன்’ (Fire Phone) அந்நிறுவனத்திற்கு கடும் சரிவைத் தந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் திறன்பேசிகள் உருவாக்கத்தில் முன்னோடியாகத் திகழ்ந்து வரும் ஆப்பிள் நிறுவனம், காண்ணாடிகள் இல்லாத முப்பரிமாணத் திரை கொண்ட ஐபோன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தொழில்நுட்ப வட்டாரங்கள் ஆருடங்கள் கூறுகின்றன.

ஆருடங்கள் உண்மையானால், ஆப்பிள் கருவிகளில் அதுதான் முதல் முப்பரிமாணக் கருவியாக இருக்கும். முப்பரிமாணத் தன்மை பெற வேண்டுமானால் வெளிப்புறத்தில் மட்டும் மாற்றம் செய்தால் போதுமானதாக இருக்காது. முப்பரிமாணத்தை அங்கீகரிக்கும் வகையில் ஒட்டுமொத்த ஐஒஎஸ் இயங்குதளத்திலும் மாற்றம் செய்யவேண்டும்.

ஆப்பிள் நிறுவனமும் முப்பரிமாணத் தன்மைக்காக ஒட்டுமொத்த ஐபோன் தளத்தையும் மாற்றுவதற்கு ஆயத்தமாகி வருவது போன்றே தோன்றுகிறது. இதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ‘பிரைம் சென்ஸ்’ (PrimeSense) எனும்  நிறுவனத்தை வாங்கி உள்ளது. இந்த பிரைம் சென்ஸ் நிறுவனம் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தை மிகச் சிறந்தமுறையில் கையாளும் என்று ஆப்பிள் வட்டாரங்களால் கூறப்படுகின்றது.

இதுவரை வெளியிடப்பட்ட முப்பரிமாணத் திறன்பேசிகள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றிகளைப் பெற்றதில்லை. இந்த வரலாற்றை ஆப்பிள் மாற்றுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.