Home நாடு யூபிஎஸ்ஆர் கேள்வித் தாள்: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு!

யூபிஎஸ்ஆர் கேள்வித் தாள்: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு!

1255
0
SHARE
Ad

UPSR 2014சிரம்பான், நவம்பர் 7 – யூபிஎஸ்ஆர் கேள்வித் தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பில் அதிகாரத்துவ இரகசியங்களை வைத்திருந்ததுடன் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதாக சாட்டப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இருவர் விசாரணை கோரியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை இந்த வழக்கு  குற்றவியல் நீதிபதி பி.ஜக்ஜிட்சிங் முன்னிலையில் விசாரணைக்குவந்தபோது மேற்கண்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்ற மொழி பெயர்ப்பாளர் சம்பந்தப்பட்ட இருவருக்கும் படித்துக் காண்பித்தார்.

பெத்தாங் பெனார் தோட்ட தேசிய வகை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த எல் சுப்பாராவ் என்ற கமலநாதன் (வயது 36), லெங்கெங் தோட்ட தேசிய வகை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த முருகன் பழனிச்சாமி (வயது 34) ஆகியோரே குற்றச்சாட்டிக்கு உள்ளானவர்களாவர்.

#TamilSchoolmychoice

அதிகாரத்துவ இரகசியங்கள் சட்டம் பிரிவு 8(1) இன் கீழ் அவ்விருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் நடந்த யூபிஎஸ்ஆர் தேர்வின் போது அவர்கள் மேற்கண்ட குற்றங்களை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணிதப் பாடதேர்வுத்தாள் 1,2, தமிழ்மொழி (கருத்துணர்தல்), தமிழ்மொழி (எழுதுதல்), அறிவியல் பாட கேள்வித் தாள் ஆகியவற்றை வைத்திருந்ததாக சுப்பாராவ் மீது ஐந்து குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கணிதப்பாட தேர்வுத் தாள் 1ஐ வைத்திருந்ததாக முருகன் ஒரு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களை ஹரேஷ் மகாதேவன் தலைமையிலான எண்மர் அடங்கிய வழக்கறிஞர் குழு பிரதிநிதித்தது. குற்றச்சாட்டு நடவடிக்கையை வான் ஷஹாருடின் வான் லாடின் மேற்கொண்டார்.