Home நாடு யுபிஎஸ்ஆர் தேர்வுத்தாள் விவகாரம்: அடுத்த வாரம் விசாரணை முடியும்!

யுபிஎஸ்ஆர் தேர்வுத்தாள் விவகாரம்: அடுத்த வாரம் விசாரணை முடியும்!

671
0
SHARE
Ad

SAC-Gan-Kong-Meng1கோலாலம்பூர், செப்டம்பர் 22 – யுபிஎஸ்ஆர் தேர்வின்போது அறிவியல் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை நடைபெற்றுள்ளதாக கோலாலம்பூர் சிஐடி பிரிவு தலைவர் கன் கோங் மெங் தெரிவித்துள்ளார்.இந்த விரிவான விசாரணை நடவடிக்கைகள் அடுத்த வாரம் முடிவுக்கு வரும் என்றார் அவர்.

தற்போது இந்த விசாரணை அறிக்கையை அட்டர்னி ஜெனரலிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.

“கடந்த வெள்ளிக்கிழமை வரை 14 பேர் கேள்வித்தாள் விவகாரம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் ஆசிரியர்கள். மற்ற இருவரில் ஒருவர் காப்பீட்டு முகவர், மற்றொருவர் பொறியியலாளர்,” என்றார் கன் கோங் மெங்.

#TamilSchoolmychoice

22 பேரிடம் வாக்குமூலம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இவர்களில் 6 பேர் மலேசிய தேர்வு வாரியத்தின் அதிகாரிகள் என்றார். மேலும் ஒரு பத்திரிகையாளர், ஒரு காப்பீட்டு முகவர், ஒரு பொறியியலாளர் மற்றும் 13 ஆசிரியர்களும் வாக்கமூலம் அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

கேள்வித்தாள் வெளியானதன் காரணமாக அறிவியல் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான தேர்வுகள் அண்மையில் ஒத்திவைக்கப்பட்டன. அத்தேர்வுகள் வரும் 30ஆம் தேதி நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.