Home One Line P1 யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் இரத்து- எஸ்பிஎம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டிற்கு ஒத்திவைப்பு!

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் இரத்து- எஸ்பிஎம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டிற்கு ஒத்திவைப்பு!

626
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2020-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் இரத்து செய்யப்பட்டதாக கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.

மேலும், எஸ்பிஎம் மற்றும் எஸ்விஎம் தேர்வுகள் 2021-ஆம் ஆண்டு முதல் காலாண்டிற்கு ஒத்திவைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, பள்ளி திறக்கும் தேதியை கல்வி அமைச்சு, பள்ளி திறப்பதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிவிக்கும் என்று அவர் கூறினார். கொவிட்-19 குறித்த விவகாரங்கள் முழுமையாக மீட்டமைக்கப்பட்ட பின்னரே பள்ளி அமர்வு மீண்டும் திறக்கும் முடிவு எடுக்கப்படும் என்று அவர் இன்று புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

எஸ்டிபிஎம் தேர்வுக்கான இரண்டாவது தவணை தேர்வின் தேதி ஆகஸ்ட் 2020- ஆக மாற்றப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது தவணை தேர்வு 2021-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் என்றும் ராட்ஸி தெரிவித்தார்.