Home கலை உலகம் இஸ்லாமிய மதம் மாறியும் பெயர் மாற்றாதது குறித்து யுவன் சங்கர் ராஜா விளக்கம்!

இஸ்லாமிய மதம் மாறியும் பெயர் மாற்றாதது குறித்து யுவன் சங்கர் ராஜா விளக்கம்!

935
0
SHARE
Ad

yuvan shankar rajaசென்னை, மார்ச் 31 – இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகு பெயரை மாற்றிக்கொள்ளாதது ஏன்? என்பது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும், தமிழ் பட உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவருமான யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே 2 திருமணங்கள் செய்து மனைவிகளை விவாகரத்து செய்தவர்.

அதன்பிறகு அவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறி, கீழக்கரையை சேர்ந்த ஜெபரூனிசா என்ற பெண்ணை 3-வது திருமணம் செய்துகொண்டார். 3-வது திருமணத்துக்கு பின் ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வந்த யுவன், நீண்ட இடைவெளிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

#TamilSchoolmychoice

அப்போது, நீங்கள் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகும் பெயரை மாற்றிக்கொள்ளாதது ஏன்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த யுவன்,

“நான் சினிமாவுக்கு வரும்போதே யுவன்சங்கர் ராஜா என்ற பெயரில்தான் அறிமுகம் ஆனேன். அந்த பெயர்தான் ரசிகர்களுக்கு பரீட்சயமானது. புதிதாக பெயர் சூட்டிக்கொண்டால் அந்த பெயரை ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா? என்பது சந்தேகம் தான். அதனால் தான் பெயரை மாற்றவில்லை” என்றார்.

உங்களுடைய 3-வது திருமணத்தில் உங்களின் தந்தை இளையராஜா கலந்துகொள்ளவில்லையே? உங்களின் திருமணத்தை அவர் ஏற்றுக்கொண்டாரா? அல்லது எதிர்ப்பு தெரிவித்தாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த யுவன்,

“எதிர்க்கவில்லை. ஊடகங்கள் குறிப்பிட்டப்படி, அது ரகசிய திருமணம் அல்ல. என் குடும்பத்தினர் அனைவருக்கும் முன்பே தெரியும். அப்பாவிடம் தெரிவித்தபோது உனக்கு எது சந்தோஷமோ அதை செய் என்று அனுமதி கொடுத்தார்”.

“என் குடும்பத்தினர் அனைவரும் அந்த திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பெண் வீட்டாருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டதால் உடனடியாக திருமணத்தை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது”.

“அப்பாவை சந்தித்து திருமணத்துக்கு அழைத்தபோது, எப்போது திருமணம்? என்று கேட்டார். 2 நாளில் திருமணத்தை நடத்தவேண்டிய சூழ்நிலை பற்றி அவரிடம் விளக்கினேன்”.

“நேரம் கிடைக்காத காரணத்தால் அப்பா என் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. திருமணத்தை முடித்த மறுநாளே அப்பாவிடம் சென்று, ஆசி பெற்றேன்” என்றார் யுவன் சங்கர் ராஜா.