Home உலகம் விண்வெளியில் சூரிய சக்தி மின் நிலையம் – சீனா முடிவு!

விண்வெளியில் சூரிய சக்தி மின் நிலையம் – சீனா முடிவு!

622
0
SHARE
Ad

mirhorizபெய்ஜிங், மார்ச் 31 – சீனா, பூமியில் இருந்து 36000 கி.மீ உயரத்தில் விண்வெளி சூரிய சக்தி மின் நிலையத்தை அமைக்க முடிவு செய்து உள்ளது. காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் தடுமாறி வரும் சீனா, இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டுவர முடியும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த திட்டத்தின் மூலம் மின்சார தட்டுப்பாட்டுகளையும் ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது:-

“பூமியில் இருந்து 36000 கி.மீ உயரத்தில் அமையவுள்ள இந்த விண்வெளி நிலையம் 5 முதல் 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இரவு நேரத்தில் நட்சத்திரம் போல் காட்சி அளிக்கும் இந்த மின் நிலையம், பூமியில் செயல்படும் சூரிய மின்சக்தி நிலையங்களை விட 10 மடங்கு அதிக மின் ஆற்றலை உற்பத்தி செய்யும்.”

#TamilSchoolmychoice

“அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி அலைகளாக மாற்றப்பட்டு பூமிக்கு அனுப்பப்படும். அதை பூமியில் உள்ள உபகரணங்கள் மூலம் உள்ளிழுக்கப்பட்டு மீண்டும் மின் ஆற்றலாக மாற்றப்படும்”.

iss_earth_orbit-1920x1080“இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவென்றால், பூமியில் பருவநிலை மாற்றத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவது போல விண்வெளி சூரிய மின்சக்தி நிலையம் பாதிக்கப்படாமல், தொடர்ந்து செயல்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 ஆயிரம் டன் எடை கொண்டதாக உருவாக இருக்கும் அந்த மின் நிலையம் விண்வெளியில் அமைக்க இருப்பது சாத்தியமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஏனெனில் அவ்வளவு பெரிய எடையை விண்வெளிக்கு கொண்டு செல்வதற்கு தகுதி வாய்ந்த இராக்கெட்டுகள் தற்போதைக்கு எந்த நாட்டிலும் இல்லை.

எனவே முதலில் அதிக சக்தி வாய்ந்த இராக்கெட்டை உருவாக்கும் முயற்சியில் சீன இறங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சீனா அத்தகைய ராக்கெட்டுகளை செய்து வருவதாகவும் அந்நாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன.