Home கலை உலகம் ‘நேர்கொண்ட பார்வை’: அஜித் படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

‘நேர்கொண்ட பார்வை’: அஜித் படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

1438
0
SHARE
Ad

சென்னை: நடிகர் அஜித்தின் ‘தல59’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டது. அத்திரைப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தித் திரைப்படமான பிங்க்’ படத்தின் தழுவலைக் கொண்ட இப்படத்தில், அஜித் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்பட இயக்குனர் வினோத் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில்,  வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தைரங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாஜலம் ஆகியோர் நடித்து வருகின்றனர்

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வரும் வேளையில், நிரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

#TamilSchoolmychoice