அவ்விரு பங்காளிக் கட்சிகளின் அதிருப்தியை தாம் புரிந்து கொண்டதாகக் கூறிய ஹசான், அவர்களின் கருத்துகளை அப்படியே விட்டுவிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சிறந்த ஒரு தீர்வினை எடுப்பதில் தேசிய முன்னணி கவனத்தை செலுத்தும் என அவர் கூறினார்.
“இந்த பிரச்சனையை எந்தவொரு பொறுப்பற்ற தரப்பும் அரசியலாக்கக் கூடாது. அதற்கு மாறாக, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சிறந்த ஒரு முடிவினை எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் அவ்விரு கட்சிகளையும் வெளியேறச் சொல்லி பதிலடிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.