Home நாடு செமினி: நம்பிக்கைக் கூட்டணி தோல்விக்கு அன்வார் முக்கியக் காரணி!

செமினி: நம்பிக்கைக் கூட்டணி தோல்விக்கு அன்வார் முக்கியக் காரணி!

917
0
SHARE
Ad

கோத்தா பாரு: நடைபெற்று முடிந்த செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் காரணம் என பாஸ் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் முகமட் கலில் அப்துல் ஹாடி தெரிவித்தார். இஸ்லாமியக்கட்சியான பாஸ்சை, அன்வார் சரமாரியாகத் தாக்கியது மலாய் சமூகத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம், பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங், சரவாக் ரிப்போர்ட் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்திருந்த மானநஷ்ட வழக்கை,  நீதிமன்றத்திற்கு வெளியே அவர் தீர்த்துக் கொண்டதை விமர்சித்ததோடு, இந்த விவகாரத்தில் 1.4 மில்லியன் ரிங்கிட் பணம் வழங்கப்பட்டதாகவும் ஆதாரங்களை வெளியிட்டார்.

பாஸ் கட்சியின் தலைவர், பிரதமர் மகாதீரை சந்தித்தது, அன்வாரின் அரசியல் வாழ்க்கைக்கு பாதகமாக முடிந்து விடும், எனக் கருதியதோடு இல்லாமல், நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளுக்குள் மகாதீரை, பிரதமர் பதவியிலிருந்து அகற்ற அக்கூட்டணிக்குள் கீழறுப்பு வேலைகள் நடந்து கொண்டிருப்பதை பாஸ் வெளியிட்டதும் அன்வாருக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது எனக் கூறினார்.