Home நாடு இஸ்லாமியர்கள் ஃபத்வாக்களை விமர்சிக்கக் கூடாது – சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து

இஸ்லாமியர்கள் ஃபத்வாக்களை விமர்சிக்கக் கூடாது – சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து

490
0
SHARE
Ad

sultan selangorஷா ஆலம், நவம்பர் 7 –  இஸ்லாமியர்கள்  மத நிபுணர்களைக் கொண்ட அதிகாரபூர்வ இஸ்லாமிய மையங்கள் வெளியிடும் ஃபத்வா எனப்படும் கட்டளைகளை  விமர்சிக்கக் கூடாது என சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.

ஃபத்வாக்களைப் பற்றி விமர்சிக்கும் முன்னர் அவற்றின் அர்த்தத்தை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

ஃபத்வாக்கள் பல்வேறு நிபுணர்களால் உருவாக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், ஃபத்வாக்களை தாமும் அங்கீகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ஒருவர் சட்டங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் அது நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும். இஸ்லாமியர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்,” என்று சிலாங்கூர் சுல்தான் மேலும் கூறியுள்ளார்.