Home இந்தியா காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, ஆம் ஆத்மி செயல்படுகிறது – பாஜக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, ஆம் ஆத்மி செயல்படுகிறது – பாஜக குற்றச்சாட்டு!

550
0
SHARE
Ad

Tamil_News_large_93184820140313015429புதுடில்லி, மார்ச் 13 – காங்கிரஸ் தலைவர், சோனியாவை எதிர்த்து, உத்தர பிரதேசத்தின், ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட, அரவிந்த் கெஜ்ரிவாலின், ‘ஆம் ஆத்மி’ கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த, பெண் நிர்வாகியான சாஷியா இலிமி மறுத்துவிட்டார். இதை வைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, ஆம் ஆத்மி செயல்படுவதாக, பா.ஜ.க. கூறுகிறது.

உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில், சோனியாவை எதிர்த்து, ‘ஆம் ஆத்மி’ கட்சியின் சாஷியா இலிமி போட்டியிடப் போவதாக, கடந்த வாரம், பட்டியல் வெளியானது. ஆனால், நேற்று முன் தினம் நிருபர்களை சந்தித்த, சாஷியா, ‘ரேபரேலியில் போட்டியிட விரும்பவில்லை, தனிப்பட்ட காரணங்களுக்காக டில்லியில் போட்டியிட விரும்புகிறேன்’ என்றார்.

இதை வைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, ஆம் ஆத்மி செயல்படுவதாக, பா.ஜ.க கூறுகிறது. அக்கட்சி தலைவர்களில் ஒருவரான,Now-BJP-saffron-instead-black-white-lotus-news-hindi-india-29649 செய்தித் தொடர்பாளர், முக்தார் அப்பாஸ் நக்வி, ஆம் ஆத்மி என்ற நீர்குமிழி உடைத்துவிட்டது.

#TamilSchoolmychoice

பெரிய வாக்குறுதிகளை கொடுத்த அவர்களால், அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. மற்றவர்களை வெளிச்சம் போட்டு காட்ட முற்பட்டவர்களின் முகத்திரை கிழிந்துள்ளது, என்றார் அவர்.