Home இந்தியா ‘நாளைக்குள் தொகுதிகளை முடிவு செய்யவேண்டும் – பாஜகவுக்கு விஜயகாந்தின் இறுதி கெடு!

‘நாளைக்குள் தொகுதிகளை முடிவு செய்யவேண்டும் – பாஜகவுக்கு விஜயகாந்தின் இறுதி கெடு!

453
0
SHARE
Ad

3575a798-5b52-4833-b829-54b80e73e748_S_secvpfசென்னை, மார்ச் 13 – நாளைக்குள் தொகுதிகளை முடிவு செய்யாவிட்டால், தே.மு.தி.க.வுக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்ய போய்விடுவேன் என, விஜயகாந்த், திடீர் மிரட்டல் விடுத்துள்ளதால், தொகுதி உடன்பாட்டை வேகமாக முடிக்க, பேச்சு வார்த்தையை, பா.ஜ.க தலைவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மூன்று மாத இழுபறிக்கு பின், தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில், வலுவான கூட்டணி உருவாகியுள்ளது. தே.மு.தி.க. – பா.ம.க – ம.தி.மு.க. மற்றும் சில கட்சி இணைந்துள்ளதால், வலுவான ஒரு அணியாக இது உருவெடுத்துள்ளது பாஜக. அதேநேரத்தில், கூட்டணியில், இணைந்துள்ள கட்சிகளுக்கு இடையே, தொகுதிகளை பங்கிடுவதில், மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

தே.மு.தி.க.வுக்கு, 14 தொகுதிகள் என, முடிவாகியுள்ளது. அந்த, 14 தொகுதிகள் எவை என்பதை அடையாளம் காணுவதற்கான பேச்சு வார்த்தையில், இழுபறி ஏற்பட்டுள்ளது. 20 தொகுதிகளை கொடுத்து, அதில் 14 தொகுதிகளை ஒதுக்கும்படி தே.மு.தி.க. கேட்டுக்கொண்டது.

#TamilSchoolmychoice

ஆனால், அந்த 20 தொகுதிகளில், பா.ம.க. – பா.ஜ.க விரும்பும் தொகுதிகளும் உள்ளதால், 14 தொகுதிகளை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை நடந்த பேச்சு வார்த்தையில், தே.மு.தி.க., கொடுத்த பட்டியலில், ஆறு தொகுதிகள் மட்டுமே அக்கட்சிக்கு, எந்த பிரச்சனையும் இல்லாமல், ஒதுக்க முடிந்துள்ளது.

அதனால், கோபமடைந்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 14-ஆம் தேதி, பிரசாரத்தை அறிவித்துள்ளார். அதற்குள், தொகுதி ஒதுக்கீட்டை முடிக்க வேண்டும் என, அவர் கெடு விதித்துள்ளார். இந்த கெடுவால், எரிச்சலடைந்த, பா.ஜ.க தலைவர்கள், தே.மு.தி.க. கொடுத்த, 20 தொகுதிகள் அடங்கிய பட்டியலை, அக்கட்சிக்கே திருப்பியனுப்பினர்.

எந்தெந்த தொகுதிகளை விட்டுத்தரலாம் என்பதை முடிவு செய்து, பட்டியலில் அக்கட்சியே மாற்றம் செய்து, திருப்பி அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி, புதிய பட்டியல் நேற்று முன்தினம் இரவு, பா.ஜ.க தலைமைக்கு வந்து சேர்ந்தது. அந்த பட்டியல் அடிப்படையில், பா.ம.க.வுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.